பயில்முறைப் பயிற்சி -1

பாரதியார் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்

1882 டிம்பர் 11

பிறப்பு

1887

தாயார் இலட்சுமியின் மறைவு

1889

தந்தையார் வள்ளியம்மாளை இரண்டாம் தாரமாக மணந்தது

1893

'பாரதி' பட்டம் பெறுதல்

1894

திருநெல்வேலி இந்துக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்தல்

1897

ஐந்தாம் படிவப் படிப்பை முடித்து இந்துக்கல்லூரி உயர் நிலைப்
பள்ளியை விட்டு வெளிவருதல்

1897 ஜூன் 15

செல்லம்மாவுடன் திருமணம்

1898 ஜூன்

தந்தையார் சின்னசாமி ஐயரின் மரணம்
காசி நகருக்குச் செல்லல்
இந்து கலாசாலையில் வடமொழியும் இந்தியும் படித்தல்
அலகாபாத் பல்கலைக்கழகப் 'பிரவேச'ப் பரிட்சையில் தேறுதல்
சுதேசியத்தில் பற்றுத் தோன்றுதல்

1902

எட்டயபுரம் திரும்புதல்

சமஸ்தான உத்யோகம் பார்த்தல்

'ஷெல்லிதாசன்' என்ற புனைபெயரில் கட்டுரை எழுதுதல்

1904

சமஸ்தானப் பணியைத் துறந்து, மதுரை வருதல்

ஜூன்

'தனிமை இரக்கம்' என்ற பாடல் 'விவேகபாநு' என்ற பத்திரிகையில்
அச்சாதல்.

ஆக8-நவ.11

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப்
பணியாற்றுதல்

நவம்பர் சென்னை 'சுதேசமித்ரன்' ஆசிரியர் குழுவில் சேர்தல் மகள் -
தங்கம்மாள் பிறப்பு
1905 நவம்பர்

'சக்கரவர்த்தினியில் 'வந்தேமாதரப்' பாடல் மொழி
பெயர்ப்பை விளக்கக் குறிப்போடு வெளியிடுதல்

1905

காங்கிரஸ் மாநாடு - காசி

1906

காங்கிரஸ் மாநாடு - கல்கத்தா ; தாதாபாய்
நவுரோஜி'சுயராஜ்ய' முழக்கம் இடுதல்

1906 ஏப்ரல்

'இந்தியா' பத்திரிகைத் துவக்கம்

1907 டிம்பர்

சூரத் காங்கிரஸ் மாநாடு - திலகரின் தீவிரவாதக்
கொள்கையில் பாரதிக்கு ஈடுபாடு ஏற்படுதல்

1908 ப்டம்பர்

பாரதியார் புதுச்சேரி சென்று அடைதல் -

'இந்தியா' பத்திரிகை நிறுத்தம்

அக்டோபர்

'இந்தியா' மீண்டும் வெறிவருதல்

இளைய மகள் சகுந்தலாவின் பிறப்பு

1912

'குயில்பாட்டு 'கண்ணன் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்', பகவத் கீதை
உரை, பதஞ்சலி யோக சூத்திர உரை ஆகியவை எழுதப்பட்டன.

1913

'கனகலிங்கம்' என்ற ஆதிதிராவிடச் சகோதரருக்குப் பூணூல்
அணிவித்தது

1918 நவம்பர் 20

பாண்டிச்சேரியிலிருந்து வெளிவருதல் - ஆங்கிலேயரால்
சிறையிடப்படல்

டிம்பர் 14

விடுதலை ஆதல், கடையத்தில் குடி ஏறல்.

1919 மே 2

எட்டயபுரம் ஜமீனுக்கு உதவி வேண்டிச் சீட்டுக்கவி எழுதியது.

1919 மார்ச்

காந்தியடிகளுடன் இராஜாஜி இல்லத்தில் சென்னையில் சந்திப்பு -
காந்தியடிகளை வாழ்த்திப் பாடுதல்

1920 ஜூன்

'இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை' : சொற்பொழிவு.

நவம்பர்

சென்னை 'சுதேசமித்திரனில்' மீண்டும் வேலை,
சென்னையில் குடி ஏறுதல்

1921 செப்டம்பர் 11

மகாகவியின் மரணம்

முன்