பயில்முறைப் பயிற்சி - 2

பாரதியின் வாழ்க்கையோடு தொடர்புடைய சில பெயர்கள் 1,2,3...
என்று வரிசையில் தரப்பட்டுள்ளன. அப்பெயர்களுக்கான
விளக்கங்கள் அ,ஆ,இ... என்ற வரிசையில் கொடுக்கப்
பெற்றுள்ளன. ஒவ்வொரு பெயரையும் அதற்குரிய விளக்கத்தோடு
பொருத்த முயல்க.

1 T.சுப்பிரமணிய ஐயர்
2 கனகலிங்கம்
3 விவேகபாநு
4 இந்தி்யா
5 சிட்டிகுப்புசாமி
ஐயங்கார்
6 நிவேதிதை
அம்மையார்
7 பாலபாரதி
8 பாலகங்காதர திலகர்
9 தாதாபாய் நவுரோஜி
10 குவளையூர்
கிருஷ்ண மாச்சாரியார்
1 விவேகாநந்தரின் சீடர் - பெண்களுக்கு உரிய
மரியாதையைத் தரவேண்டும்
என்று பாரதிக்கு உணர்த்தியவர்.
2 இந்திய விடுதலைக்காகத் தீவிரவாதக் கொள்கையை முன்
மொழிந்தவர்
3 புதுச்சேரியில் பாரதியார் முதன்முதலில் தங்க உதவியவர்
4 பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்
பெற்ற ஆதிதிராவிடச் சகோதரர்
5 பாரதியின் இறுதி நாள் வரையிலும் கூடவே இருந்து
உதவியவர்
6 பாரதி வெளியிட்ட ஆங்கில வாரப் பத்திரிக்கை
7 பாரதியின் முதல் கவிதையை
அச்சிட்ட பத்திரிக்கை
8 இந்தியா பத்திரிகையை நிறுவியவர்
9 சுதேசமித்திரன் பத்திரிகையின் உரிமையாளர்
10 கருத்துப் படங்களை முதன் முதலில் வெளியிட்ட
இந்தியப் பத்திரிகை
11 காங்கிரஸ் மாநாட்டில் முதலில்
சுயராஜ்ய முழக்கம் இட்டவர்
12 'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவர்

முன்