1.0 பாட முன்னுரை |
|
இருபதாம்
நூற்றாண்டுத்
தமிழ்க் கவிதையுலகின் தலைமகன் பாரதி. பாரதிதாசன் மொழியிலே குறிப்பிடுவது
என்றால், பாரதி
“பைந்தமிழ்த் தேர்ப்பாகன்; அவன் ஒரு செந்தமிழ்த் தேனீ;
சிந்துக்குத் தந்தை; குவிக்கும் கவிதைக்குயில்”. வைரமுத்துவின் வார்த்தைகளிலே
கூறுவது என்றால் பாரதி, “எட்டயபுரத்துக் கொட்டு முரசம்; சுதந்திரச் சூரியன்; தமிழுக்குப்
புது ரத்தம் தந்த கவிஞன்; எழுத்துக்கும்
வாழ்வுக்கும் இடையே பள்ளம் இல்லாத பாவலன்”. இத்தகைய பாரதியின் வாழ்க்கை
வரலாற்றைச் சுருக்கமாகக் காட்டுவது
இப்பாடத்தின் நோக்கம் ஆகும்.
"இத் தரணியில் தமிழ்மொழி
உள்ள வரையில் பாரதியாரின் தீஞ்சுவைச் சொற்கள் மந்திரம்
போன்று ஒவ்வொரு தமிழனின்
உள்ளத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை";
என்பார் ப. கோதண்டராம், (பாரதி யுகம், பக்.18)
|