தமிழில் கிடைக்கும் நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம்.
அந்நூலில் திருமால், முருகன், இந்திரன், வருணன் முதலிய தெய்வங்கள் பற்றிய
குறிப்புகள் உள்ளன. அதையடுத்துத் தோன்றிய சங்க இலக்கியங்களிலும் குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவபெருமானைப்
பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் பக்தியை மட்டும் பாடல்
கருத்தாகக் பாரதியாரின் தெய்வப் பாடல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கும்
பாடல்களில் முதலாவது இடம் பெற்றிருப்பது ‘விநாயகர் நான்மணிமாலை’.
இதையடுத்து, முருகன், வள்ளி, பராசக்தி (காளி, சக்தி, தேசமுத்துமாரி, கோமதி)
இராமர், கண்ணன், திருமகள், கலைமகள், புத்தர், இயேசு கிறிஸ்து, அல்லா முதலிய
தெய்வங்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். இயற்கையையும் சமுதாயம், அரசியல் முதலியவற்றில் பாரதியார் புரட்சிகரமான சீர்திருத்தவாதி. என்றாலும் தெய்வ நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது என்று கருதினார். வேத ஆகம சாஸ்திரங்களின் உண்மைக் கருத்துகளைத் தெளிவாக உணர்ந்த பாரதி, கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என எண்ணினார் ஆயினும் எல்லா மதங்களும் மனித நலத்தையே பேசுகின்றன என்பது அவரது உறுதியான கொள்கை. தெய்வ நம்பிக்கையும் வழிபாடும் ‘தெய்வ நம்பிக்கையும் வழிபாடும்’ என்பது கடவுள் மீது கொண்ட
உறுதியால் அவரை வணங்கும் செயலைக் குறிப்பது. பாரத நாட்டில் தெய்வ நம்பிக்கையும்
வழிபாடும் பண்டைக்காலம் தொட்டே காணப்படுகிறது. தமிழ் நாட்டில் பக்தியைப்
பாடல் பொருளாகக் கொண்டு பாடியவர்கள் இப்பாடம் இயற்கை வழிபாடு, இந்துசமயத் தெய்வங்கள், பிற சமயத் தெய்வங்கள், பாரதியாரின் வேண்டுதல் என்னும் நான்கு பகுப்பினுள் அடங்கும். |