‘வேண்டுதல்’ என்பது, கடவுள் தம் சக்தியால் பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கேட்பது என்று பொருள்படும். மக்கள் தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அந்தத் துன்பம் நீங்கவும், உலக வாழ்க்கைக்குத் தேவையான விருப்பங்கள் நிறைவேறவும் இறைவனிடம் வேண்டுவர். அடியார்களின் வேண்டுதல் இறைவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் தங்கள் துன்பம் நீங்க இறைவனிடம் வேண்டவில்லை. இறைவனோடு சேர வேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்த மண்ணுலக வாழ்க்கைத் துன்பமானது. ஆகவே, பிறவி வேண்டாம் என்று அவர்கள் பாடுவதைக் காணலாம். காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம்,
(பெரியபுராணம் : காரைக்கால் அம்மையார் - 1781) என்று வேண்டுவதாகச் சேக்கிழார் சொல்கிறார். அவர் பிறப்பை விரும்பவில்லை, பிறந்துவிட்டால் சிவபெருமானை மறக்காமல் இருக்க விரும்புகிறார். வேறு எந்த நோக்கமும் அவருக்கில்லை. திருநாவுக்கரசர், ‘சிவபெருமானின் குனித்த புருவத்தையும், குமிண் சிரிப்பையும், நடனமாடுவதற்காக எடுத்த பாதங்களையும் காண்பதென்றால் மனிதப் பிறவி வேண்டும் (தேவாரம்- 4941) என்று கேட்கிறார். இராமலிங்க அடிகள், ‘அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா’ என்று சிவபெருமானை வேண்டுகிறார். ஆண்டாள்,
(திருப்பாவை - 29) எனக் கண்ணனிடம் விண்ணப்பிக்கிறாள். இவர்கள் நல்ல உள்ளம்,
நல்ல சிந்தனை உடையவர்கள். இறைவனை உறுதியாக நம்பினர். ஆயினும், இவர்கள் வேண்டுதல்கள்
தங்களைக் கடைத்தேற்றும் நோக்கத்தில் உள்ளன. வீடு பேறு அடையப் பிறவியாகிய
துன்பத்தைக் கடக்க விரும்புகின்றனர். பாரதிக்கு முன்னோடியாக, அப்பா நான்
வேண்டுதல் கேட்டு அருள் 3.5.1 அனைத்தும் இன்புற வேண்டுதல் இந்த நாட்டு மண்ணையும் மைந்தர்களையும் தம் உயிராக மதித்தவர்
பாரதி. ஆகவே, உலகிலுள்ள ஓரறிவுடைய உயிரினம் முதல் ஆறறிவுடைய மனித இனம் வரை
இன்புற்று வாழவேண்டும் என்று வேண்டுகிறார். தம் வேண்டுதல்களை விநாயகர் விரைவில்
நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்.
(விநாயகர் நான்மணிமாலை - 32) என்று பாரதி வேண்டுகிறார். எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தார் தாயுமானவர். வாடிய பயிரைக் கண்டு வாடினார் இராமலிங்க அடிகள். பாரதியும் புல், பூண்டு, பூச்சி இவைகளும் இன்புற்று வாழ வேண்டும் என்பதைத் தம் வேண்டுகோளாக முன் வைக்கிறார். எல்லா உயிர்களுக்கும் நல்லது செய்ய விரும்பும் பாரதி. சக்தியிடம் கேட்பதைப் பாருங்கள்.
(அன்னையை வேண்டுதல்) எதை விதைக்கிறோமோ அதுதான் விளையும். நல்ல எண்ணத்தை விதைத்தால் நல்ல செயல் விளையும். ஆகவே நல்லதை எண்ணவும், அதைச் செயல்படுத்தவும் தேவையான வலிமையும் உறுதியும் உடைய நெஞ்சம் கேட்கிறார் பாரதி. இங்கு,
(குறள் : 666) என்ற குறளின் கருத்து ஒப்பு நோக்கத் தக்கது. 3.5.3 பயனுற வாழ வல்லமை தாராயோ? உலகில் பிறக்கும் மனிதர்கள் பயனுள்ள வகையில் வாழ்தலே சிறப்பு என்று நினைக்கிறார் பாரதி. ஆகவே, சிவசக்தியைப் பார்த்து, என்னை அறிவு மிகுந்தவனாகப் படைத்து விட்டாய். அந்த அறிவால் மனித குலம் பயன்படும் வகையில் வாழ்வதற்கான வலிமையைக் கொடு என்று வேண்டுகிறார். எதற்காக? இந்த உலகம் பயனுற வாழ்வதற்காக. ஆகையால்,
( கேட்பன - 1) என்று பாடுகிறார். 3.5.4 நூறு வயது, நீண்ட புகழ், செல்வம் 39 ஆண்டுகளே உலகில் வாழ்ந்த பாரதி நூறு வயது, நீண்ட புகழ்,
செல்வம், பேரழகு முதலியன தமக்கு வேண்டுமென்று விரும்பியிருக்கிறார். இந்த
உலகை மேனிலைப் படுத்த அறிவும் வலிமையும் இருந்தால் போதுமா? போதாது. அவர்
விரும்பியதைச் செய்து முடிக்க நீண்ட ஆயுள், செல்வம்
(விநாயகர் நான்மணிமாலை - 7)
(விநாயகர் நான்மணிமாலை - 20)
(விநாயகர் நான்மணிமாலை - 33)
(வைய முழுதும் - 6) (வாணாள்-வாழ்நாள்,ஆயுட்காலம்) எனத் தம் உயர்ந்த நோக்கங்கள் நிறைவேற வேண்டுகிறார். நூறாண்டு காலம் உலகில் வாழ அருள் செய்யும் படி மூன்று முறை கேட்கிறார். அதைச் செய்து முடிப்பதற்கு முன்பு காலன் (எமன்) தம் உயிரைக் கவர்ந்து விடக்கூடாது என்று நினைத்த பாரதி காலனைப் பார்த்து,
(காலனுக்கு உரைத்தல்) (ஆலாலம்-விடம், ஆலாலம் உண்டவன்-விடம்
உண்ட என்று எச்சரிக்கிறார். காலனிடம் அவர்
செல்ல மாட்டாராம். பாரதி, தம் பூத உடம்பு நீங்கினாலும் புகழுடம்பு நிலைத்து நிற்க விரும்பி நீண்ட புகழ் வேண்டியிருக்கிறார். அவர் கனவு நனவாகி விட்டது. இன்றும் அவர் பேசப்படுகிறாரல்லவா? பாரதி வாழ்ந்த காலச் சூழலில் இந்தியாவில் விடுதலை வேட்கை
மேலோங்கி இருந்தது. சமுதாயக் சீர் கேடுகள் மலிந்திருந்தன. இவற்றையெல்லாம்
சீர்செய்ய 100 ஆண்டுகள் வாழ விண்ணப்பிக்கிறார். தம் கடமையாக அவர் கருதுவதே
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் ஆகும் .(விநாயகர் செல்வத்துப் பயனே ஈதல் (புறநானூறு - 189) என்னும் புறநானூற்றுப் பாடல் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. அடிப்படைத் தேவை மக்கள் யாவரும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதலியவை பெற்றுத் தன்னிறைவுடன் (self- sufficiency) வாழ வேண்டும் என ஆசைப்பட்டார் பாரதி. அவற்றைத் தமக்கு அருள வேண்டும் என்று பராசக்தியிடம் விண்ணப்பம் செய்வதைப் பாருங்கள்.
(காணி நிலம்,1) காதல் மகவு வளர்ந்திட வேண்டியது வறுமை போலக் கொடியது எது? வறுமை போலக் கொடியது வறுமையே அன்றி
வேறொன்றுமில்லை என்று வறுமைக்கு ஒப்பாக வறுமையையே காட்டுகிறார் வள்ளுவர்
தமக்கென எதுவும் வேண்டாமல், உலகிற்காக, நாட்டிற்காக, மக்களுக்காக, புல்பூண்டு போன்ற உயிர்களுக்காகப் பாடிய பாரதி தெய்வத்திடம்,
(பக்தி - 7) என்று தம் மகள் உடல்நலம் பெற அறிக்கையிட்டு வேண்டுவதாகப்
பாடல் விளங்குகிறது. ஒருமுறை அவருடைய இளைய மகள் சகுந்தலாவிற்கு உடல் நலமின்றி
இருந்தபோது, அவர் மனைவி செல்லம்மாள் மருத்துவரை அழைத்து வரக் கேட்டுக் கொண்டாராம்,
மருத்துவச் செலவுக்குத் தம் கையில் பணமில்லாத பாரதியார் அதைத் தெரிவிக்காமல்
தெய்வத்தைத் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ விரும்பியிருக்கிறார் பாரதி. ஆகவே, சாகாவரம் அருள்வாய் ராமா! (சாகாவரம் - பல்லவி)
என்று சக்தியிடமும் வேண்டுகிறார். இந்த உலகம் கடவுளால் மக்களுக்காகப் படைக்கப்பட்டது.
(இறைவனை வேண்டுதல்) என்று பாடியிருப்பது சாகாவரம் பெற்று இந்த உலகில் பல்லாண்டு காலம் பயனுற வாழ விரும்பியதைப் புலப்படுத்துகிறது. பாரதியார் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று கருதினார். இந்த
உலகைக் காப்பது கர்மயோகம் என்று வேதங்கள் கூறுகின்றன. பகவத் கீதையில் கண்ணனும்
‘கடமையைச் செய் பலனை எதிர் பாராதே’ என்றார். நல்ல கருமம் நல்ல பலன் தரும்.
இதுவே பகவத் கீதையின் சாரம்.
(காளிஸ் தோத்திரம் - 3) என்ற பாடலைப் பாடியிருக்கிறார் எனக் கொள்ளலாம். காளியிடமிருந்து
பொருள் பெற்று உலகில் உள்ள துன்பங்களை, வறுமைகளை மாய்த்துவிடத் துடிக்கிறார்.
இது ஒரு பக்தனுக்குள்ள வைராக்கிய உணர்வைக் காட்டுகிறது. துறவியாக இருந்து
மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை.
பல சாதி, பல சமயங்கள் உள்ள இந்திய நாட்டு மக்களை ஒன்றுபடுத்த விரும்பிய பாரதி அறிவையும் உண்மையையும் தெய்வமாக வணங்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார். ஆகையால்,
(அறிவே தெய்வம் - 2)
(உயிர் பெற்ற தமிழர் பாட்டு - புராணங்கள்)
|