பாடம் - 1

C01121  பாரதியாரும் தமிழும்

 


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் மொழியின் பெருமை, தமிழர் பண்பாட்டின் பெருமை, தமிழரின் தொன்மை, வீரம், காதல் ஆகியவை பற்றிப் பாரதியார் கூறிய கருத்துகள் இப்பாடத்தில் கூறப்படுகின்றன.

மேலும், தமிழ்நாடு எத்தகைய வளம் பெற்றது, பிறர் போற்றும் வகையில் தமிழர் எவ்வாறு வாழவேண்டும் என்பவை பற்றிப் பாரதியாரின் கருத்துகளும் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

 

  • தமிழ்மொழி, தமிழ்ப் பாரம்பரியம் ஆகியவை பற்றிய பாரதியின் கருத்துகளை மதிப்பிட இயலும்.

  • தமிழ் மொழி சிறக்க, தமிழர் பெருமை தரணியில் பரவ, பாரதியார் காட்டும் வழிமுறைகளின் தேவையினை ஆய்ந்து உரைக்க இயலும்.

  • தமிழ்மொழியின் மீதும், தமிழ் மக்கள் மீதும் பாரதி கொண்டிருந்த உணர்வு பூர்வ ஈடுபாட்டினை எடுத்துக் காட்ட இயலும்.