|
ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை மீட்க மேற்கொண்ட
முயற்சி, மிதவாத, தீவிரவாத இயக்கங்களின் தோற்றம், பாரதியார்
விடுதலை இயக்கத்திற்கு ஆற்றிய அரும்பணி, பாரதி காட்டும் பெண்உரிமைகள்,
குழந்தை மணத்தையும் பொருந்தாமணத்தையும் வெறுத்துக் காதல் மணத்தை
வரவேற்றது, தீண்டாமையை நீக்கிச் சாதிவிடுதலை பெறப்பாடியது, அறிவைத்தெய்வமாகக்
குறிப்பிட்டது, அடிமை மோகத்தை நீக்கி அஞ்சாமல் ஒற்றுமையுடன்
போராடினால் அந்நியரிடமிருந்து விடுதலை பெறலாம் என்று வழிகாட்டியது
என்பனவற்றை இந்தப் பாடம் எடுத்துக் காட்டுகின்றது.
|