|
பாரதியார் அறிவியல் கல்வி மீது மிகுந்த ஆர்வம்
கொண்டவர். ஆரம்பப் பள்ளிப் பாடத்திலேயே மாணவர்களுக்கு
அறிவியல் பாடம் கற்றுக் கொடுப்பது மிக அவசியம் என்று
கருதினார். ஆகையால் தேசியக் கல்விப் பாடத்திட்டத்தில்
புவியியல், அறிவியல், உடற்கல்வி முதலியன சேர்க்கப்பட
வேண்டும் என்று விரும்பினார். பாரதியாரின் அறிவியல்
சிந்தனைகள் அவர் தம் பாடல்களிலும் கட்டுரைகளிலும்
ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அவற்றையே இப்பாடம்
விரிவாகச் சொல்கிறது.
|