தன் மதிப்பீடு : விடைகள் - II
|
4. |
பாரதியார், புது வடிவத்தில் தந்த பழைய பாடுபொருள் கொண்ட கவிதை எது? அதன் வாயிலாக நீவிர் அறிந்து கொள்வது என்ன?
|
பாரதியார் தம் சுயசரிதையைக் கவிதை நடையில் இயற்றியிருக்கிறார். அதன் வாயிலாக அவருடைய வாழ்க்கை, ஆங்கிலேயரால் தனிமனிதப் பொருளாதாரம் சிதைவுற்ற கொடுமை, சமுதாயத்தின் நிலை முதலியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. |
|
|