1.5 காலத்தை மாற்றிய கருத்துப் புயல்
|
E
|
|
பாரதிதாசன் தோன்றிய
காலத்தில் தமிழகம் பழமையின் பிடியில் இருந்தது. மூடப்பழக்கங்கள்,
சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மதுப்பழக்கம், பெண்ணடிமை,
இளமை மணம், கைம்மைப்பழி ஆகிய பல தீமைகள் சமுதாயத்தின் குரல்வளையை
நெரித்துக் கொண்டிருந்தன.
|
|
தீண்டாமை
|
|
|
|
பெண்ணடிமை
|
இளமை
மணம்
|
|
|
எத்தனையோ இயக்கங்கள் தோன்றி வளர்ந்தும் இவற்றை மாற்ற முடியவில்லை.
எத்தனையோ முற்போக்குச் சிந்தனையாளர்கள் சமூகத்தை மாற்ற முயன்றும்
முடியவில்லை. கவிஞர் சுப்புரத்தினம்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனார்.
|
மதுப்பழக்கம்
|
|
இருட்டறையில்
உள்ளதடா உலகம் சாதி
இருக்கின்றது
என்பானும் இருக்கின்றானே!
|
|
|
என்று மனம் நைந்தார். நைந்து வருந்தி மனம் சோம்பிடவில்லை. "கொலைவாளினை எடடா" என முழங்கினார். மரத்துப்போயிருந்த தமிழர்களைக் கனல் தெறிக்கும்
கவிதைகளால் துடித்தெழச் செய்தார்.
|
|
என்று மனிதனின் உள்ளத்தில் ஓர் இயக்கத்தை ஏற்படுத்தினார். மனிதர்களில்
உயர்வு தாழ்வு, மேல் கீழ் கற்பித்துச் சமூகத்தில் குப்பை எண்ணங்களும்
கழிவு வேலைகளும் மலிந்த காலத்தில் கவிஞர் ஒரு புலவராக உருக்கொண்டார்;
மொழி நடையில் ஒரு மின்வேகம்; கருத்தில் ஒரு புத்தொளி; பார்வையில் ஒரு
தொலைநோக்கு; செயலில் ஒரு புரட்சி முதலியவற்றைக் கொண்ட கவிஞரால் சமூகம்
ஒரு புதிய திருப்பத்தை எய்தியது.
|
1.5.1 மூடநம்பிக்கை எதிர்ப்பு
|
மூடநம்பிக்கை
|
|
சோதிடம் தனை இகழ்
என்றார் பாரதி. மனிதர்கள் இகழ்ந்தனரா? ஒருநாளில் இராகு காலம்,
யமகண்டம் என வேலை செய்யாமல் இருக்கும் நேரத்தை வளர்த்தனர். சூலம்,
அட்டமி, நவமி எனப் பயணத்திற்கு ஆகாத நாட்களெனக் கூறி
இயங்காமல் சோம்பிக்கிடக்கச் செய்தனர். செவ்வாய், வெறுவாய் எனக் கிழமையை ஒதுக்கினர்.
ஆனி, பங்குனி குடிபுகக் கூடாது எனப் புறக்கணித்தனர். 'பூனை குறுக்கே
வந்தால் போகும் காரியம் பாழ்' என்றனர். எண்ணெய் கொண்டு எதிரே வந்தால்
செல்லும் செயல் கைகூடாது எனக் கணித்தனர். தும்மினால், தொடங்கிய செயல்
அழிந்தது எனக் கருதினர். மனிதரில் சிலரைத் தொட்டால் தீட்டு என்றனர்.
சொர்க்கம், நரகம் என்ற இரண்டு உலகங்கள் உள்ளன என்றும் மனிதர் செய்யும்
புண்ணிய பாவங்களுக்குத் தகுந்தாற்போல இறப்புக்குப்பின் அங்குப் போய்ச்
சேர்வர் என்றும் பகர்ந்தனர். ஏழு பிறவிகள் இருப்பதாக நவின்றனர். இவ்வாறு
பகுத்தறிவுக்கு ஒவ்வாத எத்தனையோ நம்பிக்கைகளை நாட்டில் விதைத்து வளர்த்தனர்.
இவற்றைப் பாரதிதாசன் கடுமையாக எதிர்த்தார்.
|
|
என்று குழந்தைக்குப் பாடும் தாலாட்டிலேயே புரட்சிப்பண் பொருத்தினார்.
மூட நம்பிக்கைகளை வாழ்நாள் முழுவதும் அவர் கடுமையாகச் சாடினார்;
அம்முயற்சியில் வெற்றியும் கண்டார்.
|
1.5.2 இன உணர்வும் மொழிக்காப்பும்
|
சாதிமத
வேறுபாடுகள்
|
|
தமிழன்
என்ற இன உணர்வைப் பாரதிதாசன் வளர்த்தார். பிற பண்பாடுகளால் சீர்குலைந்து
சிதையாதவாறு தமிழ்ப்பண்பாடு காக்கப்பெற வேண்டும் என அவர் முழங்கினார்.
தமிழர்களிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து தமிழர் அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அவர்
உரைத்தார்.
இனத்தைச்
செய்தது மொழிதான்; இனத்தின்
மனத்தைச்
செய்தது மொழிதான்.
என்று
அவர் பாடுகின்றார். தமிழ் இனம் உலகில் புகழ்பெற்ற இனமாக வேண்டும் என்பது
அவர் அவா.
தமிழ் மொழியைக்
காப்பதற்காக அவர் களம் புகவும் சிறை செல்லவும் தயங்கவில்லை. வேற்றுமொழிகளின்
ஆதிக்க வேரைக் கல்லி எறியும் முயற்சியில் அவர் தலைநின்றார். இதோ இந்த
இசைப்பாட்டைக் கேளுங்கள்!
|
|
1.5.3 புதியதோர் உலகம்
செய்தவர்
|
அறிவியல் நோக்கு மலிந்த
இக்காலத்தில் பழைமைகளும், மூடநம்பிக்கைகளும், பகுத்தறிவு அற்ற எண்ணங்களும்
மண்டிக்கிடக்கும் சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக
அவர் எழுத்தின் ஒவ்வோர் அணுவையும் பயன்படுத்தினார். குடிக்கவும் கூழ்
இன்றி இருக்கும் ஏழைக் கூட்டம் ஒருபுறம்; பாலும் தேனும் தெவிட்டப்
பஞ்சணையில் உருளும் செல்வர் கூட்டம் மறுபுறம். வானுயர்ந்த மாளிகைகளில்
வாழ்வோர் ஒருபுறம்; நடைபாதைகளில் நலிவோர் மறுபுறம்.
பாழ்நிலத்தைப் புதுக்கிப் பக்குவம் செய்தவர்கள் ஒருபுறம்; அதில் வசதியாய்
உட்கார்ந்து பஞ்சாங்கம் படிப்போர் மறுபுறம். கல்பிளந்து மலைபிளந்து
கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்து தந்தோர் ஒருபுறம்; அவற்றைப் பயன்படுத்திக்
களிப்போர் மறுபுறம்.
|
|
மூச்சடக்கி
முத்தெடுப்போர் ஒருபுறம்; அதை மாலையாக்கி அணிந்து பகட்டுவோர் மறுபுறம்.
இந்த நிலை நீக்கப்பட வேண்டாமா? எல்லாரும் இந்நாட்டு மன்னர்தாமா? இதோ
அதற்குத்தான் முழங்குகிறது பாருங்கள் புரட்சிக் கவிஞரின் குரல்!
|
|