|
இந்தப் பாடம் பாரதிதாசனின் இளமைப் பருவம், அவருடைய
கல்வி முயற்சிகள், அவர் பிறந்த புதுச்சேரியின் அப்போதைய
அரசியல் சூழல், பாரதிதாசனின் ஆசிரியர்கள், அவருடைய
தமிழாசிரியப் பணி, அவர் ஏற்ற அல்லல்கள், அவருடைய
போராடும் மன இயல்பு, துணிந்த நெஞ்சம், சமூகக் காவலராக ஆற்றிய பணிகள், அவருடைய தேசிய நோக்கு ஆகியவற்றை
எடுத்துரைக்கின்றது.
பாரதியாரோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு, அதன் விளைவுகள்
பற்றி இப்பாடம் விவரிக்கின்றது.
பெரியார்
ஈ.வே. இராமசாமி அவர்களின் ‘குடியரசு’ பத்திரிகை
அவரிடத்து உண்டாக்கிய மாற்றத்தை
இந்தப் பாடம்
விளக்குகின்றது. சுயமரியாதை இயக்கத்தவராக அவர் வளர்ந்த
வகையையும் இப்பாடம் கூறுகின்றது.
|