|
உலகில்
தோன்றிய தமிழ்ப் புலவர்களில் பாரதிதாசன் தனி இடம்
பெறுகிறார். அவரது கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்தை வழி நடத்திச்
செல்லும் நோக்கம் கொண்டவை ஆகும்.
இத்தொகுதியில்
பாரதிதாசன் ஓர் அறிமுகம், பாரதிதாசனின் சமுதாயம், பாரதிதாசன் கண்ட
பெண் உலகம், பாரதிதாசனின் பகுத்தறிவுப் பார்வை,
பாரதிதாசன் பார்வையில் குடும்பம்-1, பாரதிதாசன் பார்வையில்
குடும்பம்-2 ஆகிய ஆறு பாடங்கள் உள்ளன.
தமிழ்ச் சமுதாயத்திலிருந்து
சாதியும் சமயமும் ஒழிய வேண்டும்;
தீண்டாமை இல்லாமல் போக வேண்டும் முதலிய கருத்துகளைப்
பாரதிதாசனின் சமுதாயம்’ என்னும் பாடம் தெரிவிக்கி்றது.
பெண்களுக்குக்
கல்வி அறிவும் பகுத்தறிவுச் சிந்தனையும்
வேண்டும் என்னும் கருத்தையும் விதவைகள் மறுமணம், பெண்
உரிமைச் சிந்தனைகள் முதலியவற்றையும் ‘பாரதிதாசன் கண்ட
பெண் உலகம்’ என்னும் பாடம் தெரிவிக்கிறது.
சாதிக்
கொடுமைகளும் சமய முரண்பாடுகளும் பகுத்தறிவுக்கு
முரண் ஆனவை. மூடப் பழக்கவழக்கங்கள் இல்லாமல் பகுத்தறிவுச் சிந்தனை உடையதாகத்
தமிழ்ச் சமுதாயம் மலர வேண்டும் என்னும் கருத்துகளைப் ‘பாரதிதாசனின்
பகுத்தறிவுப் பார்வை’ என்னும்
பாடம் தெரிவிக்கிறது.
குடும்பத்தில்
பெண்ணுக்கு உரிய சிறப்பிடத்தையும் ஆணுக்கு நிகராகப்
பெண் விளங்குவதையும் பாரதிதாசன் பார்வையில்
குடும்பம் - 1 என்னும் பாடம் தொகுத்துத் தருகிறது.
விருந்தோம்பல்
சிறப்பையும் கல்வி அறிவு இல்லாத பெண்
இருக்கும் வீடு இருண்ட வீடு என்பதையும்
‘பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 2’ என்னும் பாடம் தொகுத்துத்
தருகிறது.
|