தன் மதிப்பீடு: விடைகள் - I
 

2. புதுவை அரசு கொண்டிருந்த முற்போக்குத் திட்டங்கள் யாவை?

புதுவையில் ஆட்சி செய்த பிரஞ்சு அரசு பல முற்போக்குத்திட்டங்களைத் தொடங்கியது.

  1. தொழிலாளருக்கு எட்டு மணிநேரம் வேலை செய்யும் திட்டத்தை உருவாக்கியது.

  2. பெண்களுக்குக் கல்வி கற்பதற்காகத் தனிப்பள்ளிக் கூடங்களை அமைத்தது.

  3. முதியோருக்குக் கல்வி கற்பதற்கான பள்ளிக் கூடங்களை நிறுவியது.

  4. மதிய உணவுத் திட்டமும் ஏற்படுத்தப்பட்டது. எல்லோருக்கும் கல்வி எனும் திட்டம் ஒன்றினையும் உருவாக்கியது.

  5. கல்வியை அரசின் பொறுப்புக்குள் கொண்டு வந்தது.