|
பாரதிதாசனின்
பொதுவுடைமை நோக்கை இப்பாடம்
எடுத்துரைக்கின்றது; சாதி வேறுபாட்டுணர்வைக் கண்டித்துச்
சாய்க்கும் (வீழ்த்தும்) அவர் கவிதைகளின் சாற்றைப் பிழிந்து
தருகின்றது; மத வெறியால் குலைந்து போகாதீர் என்று குரல்
கொடுக்கும் அவர் பாடல்களை இனம்
காட்டுகிறது.
பகுத்தறிவு என்ற உலகம் நோக்கி மனித சமுதாயம் நடையிடத்
தூண்டும் அவர் முழக்கங்களை எடுத்துரைக்கின்றது.
|