தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4. மதம் சமுதாயத்தில் என்ன செய்யுமென்று பாரதிதாசன் கருதுகின்றார்?

மதம் மனிதனை அவனது உயர்வுக்குப் போராடாமல் தடுத்தது. வறுமையில் இருக்கும் பலரை வழிபாடு, அர்ச்சனை, விழா, வேள்வி, தலப்பயணம், கழுவாய்தேடல் போன்றவற்றிற்குப் பணம் செலவழிக்கத் தூண்டியது. பழைய பிறவியில் செய்த கருமங்களால் துன்பம் வந்தது என்று கூறியது. இவ்வாறு சமுதாயத்தில், மனிதனை முன்னேறவிடாமல் பல தீமைகளைச் செய்யும் என்று கூறினார் பாரதிதாசன்.