4.5
பொது உடைமை
|
E
|
உலக
மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் சிந்திக்கத் தொடங்கினால்
பொது உடைமையை ஏற்றுக் கொள்வார்கள்.
வலியவர்கள்,
எளியவர்களை வாட்டும் மனப்பான்மை இல்லாமல் ஒழிய வேண்டும்.
வறியவன், ஏழை என்னும் நிலை மாற வேண்டும் என்று பாரதிதாசன்
சிந்தித்துள்ளார். எனவே,
|
|
எல்லார்க்கும் எல்லாம்
என்று இருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது
இந்த வையம்
|
(பாண்டியன்
பரிசு, இயல் - 56)
|
என்று பாடியுள்ளார்.
இந்த உலகில் உள்ள பொருள்கள் எல்லாம்
எல்லார்க்கும் பொது என்ற எண்ணம் எல்லாரிடமும் தோன்ற
வேண்டும். அவ்வாறு தோன்றினால் ஒருவருக்கு ஒருவர் சுரண்டும்
எண்ணம் தோன்றாது.
|
நல்லவர் நாட்டினை வல்லவர்
தாழ்த்திடும்
நச்சு மனப்பான்மை
தொல்புவி மேல் விழும் பேரிடியாம்;
அது
தூய்மைதனைப் போக்கும்!
. . . . . . . . . . . . . . . . .
செல்வங்கள் யாவர்க்கும்
என்றே சொல்லிப் பேரிகை
திக்கில் முழக்கிடுவாய்
|
(பாரதிதாசன்
கவிதைகள், 44, பேரிகை - 3)
|
என்னும் பாடலில் வல்லவர்களால்
நல்லவர் நாடு
அடிமைப்படுத்தப்படக் கூடாது; அவ்வாறு அடிமைப்படுத்தாமல்
இருக்க வேண்டும் என்றால் செல்வம் எல்லாருக்கும் பொது என்று
இருக்க வேண்டும் என்கிறார்.
|
4.5.1 பொது உடைமை உலகம்
|
பொது
உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய
உலகமாக அமையும். அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும்.
இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை
இல்லாமல் போகும் என்கிறார் பாரதிதாசன்.
|
புதியதோர் உலகம்
செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
|
(பாரதிதாசன்
கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)
|
என்று புதிய உலகு படைக்கப் பாடியுள்ளார் பாரதிதாசன்.
புதிய
புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள்
அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற
உயர்ந்த கருத்தைப் பாரதிதாசன்,
|
புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள்
இல்லை
இன்ப நல்லுலகைக்
காண்பாய்
|
(நாள்மலர்கள்,
பக். 134)
|
என்று பாடியுள்ளார். இப்படிப்பட்ட தன்மை உலகில்
மலர
வேண்டும். அவ்வாறு மலர்ந்தால் இன்ப உலகமாக இருக்கும்
என்று தெளியலாம்.
|
4.5.2 இல்லாதவர் இல்லை
|
பொது
உடைமை உலகில் இல்லாதவர்கள் என்று
யாரும்
இருக்கமாட்டார்கள். உணவு இல்லை என்றும் வாழ்வு
இல்லை
என்றும் யாரும் வருந்தமாட்டார்கள். சரியான
நீதியும்
நிலைத்திருக்கும் என்ற கருத்தைப் பாரதிதாசன்,
|
|
தலையாகிய அறமேபுரி
சரிநீதி
உதவுவாய்
சமமே
பொருள் ஜனநாயகம்
எனவே
முரசு அறைவாய்
இலையே
உணவு இலையே கதி
இலையே
எனும் எளிமை
இனிமேல்
இலை எனவே முரசு
அறைவாய்
முரசு அறைவாய்
|
(பாரதிதாசன்
கவிதைகள், 64, வாளினை எடடா)
|
என்று பாடியுள்ளார். இந்தக் கருத்தை
முரசு அறைந்து
எல்லாருக்கும் தெரிவிக்கும்படியாகவும் பாரதிதாசன்
தெரிவித்துள்ளார். பகுத்தறிவாளர்கள் நிறைந்த சமுதாயம்தான்
பொதுஉடைமையை நோக்கிச் செல்லும் என்னும் சிந்தனை
கொண்ட பாரதிதாசன்,
|
எல்லார்க்கும் தேசம்;
எல்லார்க்கும் உடைமை எலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக
|
(பாரதிதாசன்
கவிதைகள், வீரத்தாய் காட்சி - 10)
|
என்று நாட்டு மக்கள் யாவர்க்கும் இந்தத் தேசம் பொதுவானது
என்று தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் உரிமையும் உடைமையும்
எல்லார்க்கும் பொதுவானது ஆகும். எல்லார்க்கும் கல்வி, சுகாதாரம்
வாய்க்க வேண்டும் என்றும் எல்லாருக்கும்
நல்ல இதயம்
பொருந்திட வேண்டும் என்றும் பாடியுள்ளார்.
|
|