|
அறிவுக்குப்
பொருந்தாத கருத்துகளை மறுப்பதும் அறிவுக்குப்
பொருந்தும் கருத்துகளை ஏற்பதும் பகுத்தறிவு
என்பதை
இந்தப் பாடம் தெரிவிக்கிறது.
சாதிப்
பிரிவினையால் மனித சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள
பிரிவினைகளையும் மதங்களால்
ஏற்பட்டுள்ள
பிணக்குகளையும் எடுத்துக்காட்டி, சாதி, சமயச் சண்டைகள்
இல்லாத உலகுக்கு இந்தப் பாடம் வழிகாட்டுகிறது.
மூடநம்பிக்கையை
ஒழித்து வாழ்வில் நன்னம்பிக்கையை
வளர்த்திடும் வழிகளை உணர்த்துகிறது. கடவுள்
பற்றிய
பாரதிதாசனின் எண்ணங்களையும் இந்தப்
பாடம்
எடுத்துரைக்கிறது.
|