|
மனித
சமுதாயத்தின் அடிப்படை, குடும்பம் ஆகும்.
குடும்ப
அமைப்பு, சிறந்த முறையில் அமைந்தால் அதை
நல்ல
குடும்பம் என்கிறோம். ‘நல்ல குடும்பம் பல்கலைக்
கழகம்’
என்று பாரதிதாசன் நல்ல குடும்பத்தைப் பல்கலைக்கழகத்துடன்
ஒப்புமைப்படுத்தியுள்ளார்.
குடும்ப அமைப்பில் பெண், முதன்மை இடத்தைப் பெறுகிறாள்.
காலை முதல், இரவு வரை குடும்பத்திற்காகக் கடமை ஆற்றும்
பெண்ணை இந்தப் பாடத்தில் பாரதிதாசன் படம்
பிடித்துக்
காட்டுகிறார்.
குடும்பக்
கடமையுடன் அந்தப் பெண், தமிழ் வளர்ச்சியிலும்
பொதுநலத்திலும் ஆர்வம் கொண்டு இருப்பதையும்
இந்தப்
பாடம் தெரிவிக்கிறது.
|