(மோப்ப = முகந்து பார்த்தால்,
குழையும் = வாடும்,
அனிச்சம் = அனிச்ச மலர், முகம்திரிந்து
= முகம் மலராமல்,
நோக்க = பார்த்தால், விருந்து = விருந்தினர்)
என்னும்
குறளுக்கு ஏற்ப விருந்தோம்பல் பண்பு, குடும்பத்தில்
விளங்க வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.
குடும்பத்தில்
உள்ளவர்கள் அனைவரும் கல்வி
அறிவு
பெற்றவர்களாகத் திகழ வேண்டும். அவ்வாறு இல்லை என்றால்
அந்தக் குடும்பம் எவ்வாறு அழிந்து போகும் என்பதைத் தெரிவிக்க
‘இருண்ட வீடு’ என்னும் காவியத்தைப் படைத்துள்ளார் பாரதிதாசன்.
இவை பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.
|