|
ஒரு
குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அந்தக்
குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் கடமையைச் சரியாகச்
செய்ய வேண்டும் என்பதை இந்தப் பாடம் தெரிவிக்கிறது.
பண்டைத்
தமிழர்கள் விருந்தோம்பலைத் தங்கள் கடமையாகக்
கொண்டு வாழ்ந்தனர். அந்த விருந்தோம்பல் பண்பில் சற்றும்
குறைவு இல்லாமல் விருந்தோம்பும் தலைவியை இந்தப் பாடம்
அறிமுகம் செய்கிறது.
நல்ல
பொறுப்புள்ள தலைவி வாழும் குடும்பம்
சிறந்து
விளங்கும் என்பதைக் குடும்ப விளக்கில் காட்டிய பாரதிதாசன்,
பொறுப்பற்ற தலைவி வாழும் வீட்டை இருண்ட வீடாகக்
காட்டியிருப்பதையும் இந்தப்பாடம் அறிவிக்கிறது.
|