|
தமிழ் மொழியைப் பாரதிதாசன்
உயிருக்கு நிகராகக் கருதினார். தமிழ்மொழியின் தொன்மைச்
சிறப்பைத் தமிழ்மக்களும் பிறரும் உணர வேண்டும் என்னும்
நோக்கத்துடன் தமிழ்மொழியின் பழைமைச் சிறப்பைத் தமது பாடல்களில்
படைத்துள்ளார்.
தமிழ்
மக்களை ஒன்று சேர்க்கும் கருவி, தமிழ் மொழியைத்
தவிர வேறு எதுவும் இல்லை என்றும் விளக்கிக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின்
கல்விச் சாலைகளிலும், ஏடுகளிலும், வழக்கு மன்றங்களிலும்
தமிழ் முழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ‘எங்கும் தமிழ்;
எதிலும் தமிழ்’ என்ற நிலை உருவாக வேண்டும் என்று பாரதிதாசன்
தெரிவித்த கருத்துகளை இந்தப் பாடம் தெரிவிக்கிறது.
|