|
இயற்கைப்
பொருள்களைப் பார்த்து அவற்றின் அழகைத்
தமது பாடல்களில் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
மலையையும்,
மலையிலிருந்து பாயும் அருவியையும்,
மழையையும் உவமைகளுடன்
அழகாகக்
காட்சிப்படுத்தியுள்ளார்.
வானத்தையும்,
நிலவையும், காலையையும் மாலையையும்
தமது கவிதைக்குள் பதித்து, அவற்றின் அழகை உலாவரச்
செய்துள்ளார்.
இந்த
இயற்கைக் காட்சிகளின் வாயிலாகத் தமது சமுதாயக்
கண்ணோட்டத்தையும் பாரதிதாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவை போன்ற செய்திகளை இந்தப் பாடம் தெரிவிக்கிறது.
|