தன் மதிப்பீடு: விடைகள் - I
 

1. மலையின் அழகைப் பாரதிதாசன் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?

இயற்கை வளம் பொருந்தி இருக்கும் ஒரு பகுதி. மலைப்பகுதி. அங்கு அழகான மரங்கள், செடிகொடிகள் நிறைந்திருக்கும். அவற்றில் அழகான பூக்கள். காய்கனிகள் காணப்படும். இவை நம்மை ஆனந்தம் அடையச் செய்யும். மலையின் ஒரு பக்கம் குயில் கூவிக் கொண்டிருக்கும், இன்னொரு பக்கம் மயில்தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கும், தேனீக்கள் இன்னிசை பாடிக் கொண்டிருக்கும். இவ்வாறு மலையில் அழகான காட்சிகள் பல இருக்கும். அக்காட்சிகளைப் பாரதிதாசன் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
 

முன்