இந்தப்
பாடத்தில் நாம் பாரதிதாசனின் நான்கு காப்பியங்களின்
கதை நிகழ்வுகளைக் கண்டோம். இந்த நான்கு காப்பியங்களும் 1930
முதல் 1948க்குள் வெளியிடப்பெற்றவை ஆகும். இந்தக்
கால
கட்டத்தில் இந்தியா குடியரசு நாடு ஆக வில்லை. முதல் மூன்று
காப்பியங்கள் வெளியிடப்பட்ட காலத்தில் இந்தியா விடுதலையைக்
கூடப் பார்க்கவில்லை.
குடியரசு
நாடாக இந்தியா மலர்வதற்கு முன்பே தமது
மூன்று
காப்பியங்களின் இறுதியிலும் மன்னராட்சி மறைந்து குடியாட்சி
மலர்ந்ததாகப் பாரதிதாசன்
பாடியுள்ளார்.
குடியாட்சியில்
எல்லாப் பொருளும் எல்லாருக்கும் கிடைக்கும்
என்ற கருத்தையும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். குடியாட்சி
நடக்கும் நாட்டில் சாதிச் சண்டைகளும் மதச் சண்டைகளும்
இல்லாமல் ஒழியும் என்பதையும் பாரதிதாசன்
தெளிவாக
விளக்கியுள்ளார்.
|