|
செய்யுள்
வடிவில் ஒரு தொடர் கருத்தை அல்லது கதையைத்
தெரிவிப்பதைக் காப்பியம் என்று இந்தப்
பாடம்
தெரிவிக்கிறது.
பாரதிதாசன்
தமது காப்பியங்கள் வாயிலாக, சாதி வேறுபாடு
அற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு முயன்றுள்ளார்;
பகுத்தறிவுக் கருத்துகளையும் குடியாட்சிப் பெருமைகளையும்
வெளிப்படுத்தி உள்ளார்; பெண்களை வீரமும்
அறிவும்
நிரம்பியவர்களாகப் படைத்துள்ளார்.
மூடநம்பிக்கை
ஒழிந்திடவும், தமிழ்மொழியும் தமிழினமும்
உயர்வு எய்திடவும் பாரதிதாசனின்
காப்பியங்கள்
வழிகாட்டுகின்றன என்பதை இந்தப் பாடம் கூறுகிறது.
|