|
தமிழிசை
வளர்ச்சிக்காகப் பாரதிதாசன்
பாடியுள்ள
இசைப்பாடல்களை இந்தப் பாடம் அறிமுகம் செய்கிறது.
இசைப்பாடல்கள்
வாயிலாகச் சிறுவர்களுக்கும், மகளிருக்கும்
பகுத்தறிவுக் கருத்துகளைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுப்
பற்றையும் தமிழ்மொழிப்
பற்றையும்
பாரதிதாசனின் இசைப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
காதல்
பாடல்களின் வாயிலாகக் கூட,
தொழிலாளர்
மேன்மையைப் பாரதிதாசனின் இசைப்பாடல்கள்
அறிவிக்கின்றன என்பனவற்றை
இந்தப்பாடம்
எடுத்துரைக்கின்றது.
|