இயல்,
இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டு
தமிழ் மொழி வளர்ந்தது. அவற்றுள் பழங்கால இயல் நூல்கள்
இன்றும் பல கிடைக்கின்றன. இசை நூல்களும் நாடக நூல்களும்
கிடைக்கவில்லை. இசைத்தமிழ் நூல்கள் தேவார காலத்தில் பல
தோன்றின. ஆனால் நாடக நூல்கள் தோன்றவில்லை. அந்தக்
குறையைப் போக்கியது சுந்தரனாரின் ‘மனோன்மணீயம்’ என்னும்
நாடகம் ஆகும். அதைத் தொடர்ந்து சிறந்த நாடக
நூல்கள்
தோன்றவில்லை. இந்தக் கால கட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன்
கவிதையிலும் உரைநடையிலும் ஆன பல நாடக நூல்களை
இயற்றியுள்ளார்.
|