5.7
கழைக்கூத்தியின் காதல்
|
E
|
சாதி,
மத வேறுபாடுகளும் ஏழை, செல்வன்
முதலிய
வேறுபாடுகளும் மறைய வேண்டும் என்னும் நோக்கத்தில்
படைக்கப்பட்டது இந்நாடகம்.
|
5.7.1 கழைக்
கூத்தியின் காதல் நாடகக் கதை
|
தொண்டை
நாட்டின் ஒரு பகுதியை வள்ளல் சடையநாதன்
என்பவன் ஆண்டு வந்தான். அவனை முத்துநகை என்பவள்
விரும்பினாள். முத்துநகை கழைக்கூத்து ஆடிப் பிழைத்து வந்தாள்.
|
|
காட்சி
|
கழைக்கூத்து என்பது ஒரு மூங்கிலை வைத்துக் கொண்டு அதன்
உதவியால் பல்வேறு ஆட்டங்களை நிகழ்த்துவது ஆகும்.
(கழை - மூங்கில்)
|
மன்னன் தனது படையுடன் வந்து கொண்டிருந்தான். அவன் வரும்
வழியில் ஓர் ஆலமரத்தில் மறைந்திருந்த முத்துநகை, மன்னனுக்குத்
தெரியாமல் அவனது மணி மகுடத்தை எடுத்து விடுகிறாள்.
|
|
காட்சி
|
அரண்மனைக்குச்
சென்ற மன்னன் தனது மணிமகுடத்தைத் தேடி
வந்தான். ஆலமரத்தில் இருந்த முத்துநகை ‘விச்சுளி’ என்னும்
ஆட்டத்தில் சிறந்தவள் ஆவாள்.
|
விச்சுளி ஆட்டம் என்பது ஒரு சிறிய பொருளில் கூட, தனது
உடலை மறைத்துக் கொள்ளும் கலை ஆகும்.
|
முத்து நகை தனது உருவத்தை மறைத்துக் கொண்டு மன்னனுக்குக்
கேட்கும் படியாகப், ‘புத்தூர் சாவடிக்கு வந்தால்
மகுடம்
கிடைக்கும்’ என்று கூறினாள்.
சாவடியில்
முத்துநகை மறைந்து கொண்டாள். மன்னனுக்கு மகுடம்
கிடைக்கச் செய்தாள்.
மற்றொரு
நாள் முத்துநகை ஆண்டியப்பன் என்னும் பெயரில்
ஆண் உருவத்துடன் சென்று மன்னனைக் கடத்தி வந்தாள்.
அவனை ஒரு குகையில் அடைத்து வைத்தாள்.
மன்னனைக்
காணாத அமைச்சன் தானே அரசனாகத்
திட்டமிடுகிறான். அமைச்சனின் தீய எண்ணத்தை முத்துநகை
அனைவரிடமும் வெளிப்படுத்துகிறாள்.
|