தமிழ்க்
கவிதை உலகம் பல்லாயிரம் ஆண்டுகளாய்ப்
பல
கவிஞர்களைக் கண்டு வருகிறது. அவர்களில்
இருபதாம்
நூற்றாண்டில் விளங்கிய கவிஞர்களில் பாவேந்தர் பாரதிதாசன்
தனக்கென்று தனி இடத்தைப் பெற்றுள்ளார். சங்ககாலக் கவிஞர்கள்
தாங்கள் வாழ்ந்த காலத்தைத் தங்கள் கவிதைகள் வாயிலாகத்
தந்துள்ளனர். அவற்றின் துணைகொண்டு சங்ககால மக்களின்
வாழ்க்கை முறை, பண்பாடு முதலியவற்றை நாம் அறிய முடியும்.
சங்ககாலப் புலவர்களைப் போன்று பாரதிதாசனும் தாம் வாழ்ந்த
காலத்தைத் தமது கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
குடியாட்சி
தோன்றுவதற்கு முன்பே இந்தியாவில் குடியாட்சி மலர
வேண்டும் என்று தமது காப்பியங்களில்
பாரதிதாசன்
குறிப்பிட்டுள்ளார். தமிழிசை மலர்ச்சிக்காக எண்ணற்ற தமிழிசைப்
பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழ் நாடக
உலகிற்குத்
தொண்டு செய்யும் நோக்கில் கவிதை நாடகங்களையும் உரைநடை
நாடகங்களையும் படைத்துள்ளார்.
பாரதிதாசனின்
புரட்சிகரமான கருத்துகளும் மறுமலர்ச்சிச்
சிந்தனைகளும் அவரது படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. அவை
நிலவும் வரை பாரதிதாசனும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.
|