|
எளிய
இனிய சொற்களைச் சேர்த்து அதைக் கவிதையாக்கி
அதன் மூலம் புரட்சிக் கருத்துகளை வெளிப்படுத்தியவர்
பாரதிதாசன்.
இந்தியா,
குடியரசு நாடாக மலர்வதற்கு
முன்பே
குடியாட்சியின் சிறப்புகளைப் பாரதிதாசன் பாடியுள்ளார்.
சமத்துவச் சமுதாயம் உருவாவதற்குப்
பாடல்களை
ஆயுதமாகப் பயன்படுத்தினார் அவர்.
பாரதிதாசனின்
கவிதைகள் இன்றும் சமுதாயத்தில் உள்ள
சீர்கேடுகளைப் போக்குவதற்கும் தமிழ்
மொழியின்
வளர்ச்சிக்கும் உதவுகின்றன. பாரதிதாசன் தமது புரட்சிப்
படைப்புகளாலும் புதுமைச் சிந்தனைகளாலும் வாழ்கிறார்
என்பதை இந்தப் பாடம் எடுத்துக் கூறுகிறது.
|