2.5 தொகுப்புரை

நான்கு மணிகள் போன்ற நீதிகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார் விளம்பிநாகனார். இல்லற நெறிகள் எவை என்று கூறுகிறார் ஆசிரியர். வாழ்வியல் உண்மைகளைப் பல கோணங்களில் அவர் கூறுவதைக் காண முடிகிறது. கல்வியின் பயன் நல்லொழுக்கமே என்பது வலியுறுத்தப்படுகிறது.

உலக இயல்பு, மாந்தர் இயல்பு, கற்றார் இயல்பு என்று வகுத்தும், தொகுத்தும் உரைக்கிறார் விளம்பி நாகனார்.

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைக் கற்பவர் மனத்தில் பதியும் வண்ணம் சிறப்பாகச் சொல்கிறது நான்மணிக்கடிகை.

எவற்றையெல்லாம் நீக்கினால் மனிதனாக வாழ்ந்து சிறப்படைய முடியும் என்பதையும் பட்டியல் இடுகிறது இந்நூல்.

உலக இயல்பு என்ற நிலையில் வாழ்வியல் உண்மைகள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளைத் தொகுத்துரைக்கும் சிறந்த நூல் நான்மணிக்கடிகை எனலாம்.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. அரசனும் _____________ இல்வழி இல். [விடை]
2. கல்லாத _____________ உலகம் மதியாது. [விடை]
3. அழகும் இளமையும் _____________ கெடும். [விடை]
4. மூப்பு அடையாத _____________ இல்லை. [விடை]
5. பிறப்பாரும் இறப்பாரும் _____________ உள்ளனர். [விடை]