தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
3.
|
சதகம் என்றால் என்ன? நூறு பாடல்களைக் கொண்டு உருவாக்கப்படும் இலக்கியம்
'சதகம்' என வழங்கப்படும். கொங்கு மண்டல சதகம் போல்
ஓர் இடத்தின் சிறப்பைப் பாடுவதாகவும் நூல் அமையலாம். அறக்கருத்துகளை வலியுறுத்தும் சதகங்கள் நீதிச் சதகங்கள்
எனப்படும். அவற்றில் ஒவ்வொரு பாடலின்
ஈற்றடியும்
இறைவனை விளிப்பதாக முற்றுப்பெறும். |