2.0 பாட முன்னுரை ஒளவையாரால் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்), நல்வழி என்னும் அறநூல்கள் பாடப்பட்டுள்ளன. இவற்றுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் இரு அறநூல்களிலும் உள்ள அறக்கருத்துகளை இந்தப் பாடம் விளக்கிக் கூறுகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் இரண்டுமே ஓரடிப் பாடல்களைக் கொண்டவை. ஐந்து வயது கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள் இந்நூல்களில் அடங்கி உள்ளன. ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் எளிமையான நூல் அமைப்புடன் எளிய சொற்களில் அமைந்துள்ளன. எனவே, இந்நூல்கள் தோன்றிய காலம்முதல் இன்றுவரை அனைவராலும் படிக்கப்படுகின்றன. |