5.9 தொகுப்புரை

நீதி நெறிவிளக்கம், கடவுள் வாழ்த்துச் செய்யுளுடன் நூற்று இரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்த நூல் மனித வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளை விளக்குகிறது.

கல்வியின் சிறப்பையும் செல்வத்தின் தேவையையும் எடுத்துக் கூறுகிறது. மனிதன் தனது விடா முயற்சியின் உதவியால் விதியையும் மாற்றி அமைக்கமுடியும் என்னும் நம்பிக்கையை இந்நூல் வாயிலாகக் குமரகுருபரர் ஊட்டுகிறார்.

செயல்திறம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதையும், சான்றோர்கள் கடவுளைப் போல் அனைவருக்கும் உதவி செய்வார்கள் என்பதையும் இந்நூல் தெரிவிக்கிறது.

ஆசைகளைத் துறந்து துறவியர் வாழவேண்டும் என்பதையும் அவர்கள் அறுசுவை உணவையும் தூக்கத்தையும் மிகுதியாக விரும்பக் கூடாது என்பதையும் அறியமுடியும்.

போலித் துறவியர் கொண்டுள்ள தவ வேடத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்னும் உண்மையையும் நீதிநெறிவிளக்கம் தெரிவித்துள்ளது.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
எந்தச் செல்வத்தால் பயன் இல்லை? [விடை]
2.
எச்செயல்கள் செய்வதற்கு எளிமையானவை? [விடை]
3.
சான்றோரைக் குமரகுருபரர் எதனுடன் உவமித்துள்ளார்? [விடை]
4.

அனைவருக்கும் தெய்வமாகக் குமரகுருபரர் யாரைக் குறிப்பிட்டுள்ளார்?

[விடை]
5.
யாரைப் போலித்துறவியர் என்கிறோம்? [விடை]