இந்தப் பாடத்தில், மடல் இலக்கியத்தின்
தோற்றம், பெயர்க் காரணம் முதலியவை
விளக்கப்படுகின்றன. மடல் இலக்கிய வகையின்
முன்னோடிகள், மடலேறுதல் ஆகியன
பேசப்படுகின்றன.
இப்பாடத்தில் திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல்
விரிவாகப் பார்க்கப்படுகிறது. மடல் இலக்கியப் போக்கு,
தலைவியின் நிலை, குறத்தி குறிகூறும் முறை, திருமாலின்
பெருமை, தலைவி தூதுவிடல், தலைவி மடல்
ஏறப்போவதாகக் கூறல், திருமால் எழுந்தருளியுள்ள இடங்கள்
அனைத்தும் விளக்கமாகக் கூறப்படுகின்றன.
|