தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பரணி இலக்கியம். தமிழர்களின் புறவாழ்க்கையைப் பாடுபவை புற இலக்கியங்களாகும். பரணி புற இலக்கியத்தைச் சார்ந்ததாகும்.
ஆயினும் இதிலுள்ள கடைத்திறப்புப் பகுதி காதல் இலக்கிய மரபையும் கொண்டுள்ளது. பரணியின் பெயர்க்காரணம், பரணியின் பொது இலக்கணம், அதன் அமைப்பு, உறுப்புகள் ஆகியன இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன. வீரத்தைப் பாடிப் பரவிய பரணி
பின்னர் சமயம் சார்ந்ததாக வளர்ந்ததையும் இது குறிப்பிடுகிறது. இந்தப் பாடத்தில் சிறப்பாகக் கலிங்கத்துப்பரணி பற்றிய அறிமுகமும், ஆசிரியர் செயங்கொண்டாரின் சிறப்பும்
பாட்டுடைத் தலைவனாகிய முதற் குலோத்துங்க சோழனின் பெருமையும் விரித்துரைக்கப்படுகின்றன. கலிங்கத்துப்பரணியில் போர் வருணனை, போர்க்கள வீரர்வருணனை, பேய் வருணனை ஆகியவை
சுவையாக விளக்கப்படுகின்றன.
|