சதகம் என்ற சொல்லின் விளக்கம் பற்றி கூறுகிறது. சதகம் என்றால் நூறு என்று
பொருள்படும். சதக இலக்கியத்தின் இலக்கணம், வகைகள், அவற்றின் நோக்கம் ஆகியவை பற்றிக் குறிப்பிடுகிறது. படிக்காசுப் புலவர் பாடிய தண்டலையார் சதகம் பற்றி விரிவாகப் பேசுகிறது.
சதகத்தின் பாடுபொருள்களைக் கருத்து அடிப்படையில் சுட்டிக் காட்டுகிறது.
கற்பின் மேன்மை, புதல்வர் பெருமை, விருந்தோம்பல் ஆகிய இல்லற நெறிகளைக் காட்டுகிறது. இனிமை, பொறுமை ஆகிய உயர்ந்த பண்புகளும், பொய்மை, வஞ்சனையாகிய
சிறுமைப் பண்புகளும் விளக்கப்படுகின்றன.
உலக நீதியையும் அரச நீதியையும் உணர்த்துகிறது.
|