6.1 மெய்ம்மயக்கம்

உயிர் எழுத்துடன் உயிர் எழுத்துச் சேர்ந்து வருதல் இல்லை.  எனவே இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருதல் பற்றி இப்பாடத்தில் குறிப்பிடவில்லை.  மயக்கம் என்பது சேர்ந்து வருதலைக் குறிக்கும். மெய் எழுத்துகள் இரண்டு சேர்ந்து வருதலைக் குறிப்பது மெய்ம்மயக்கம் எனப்படும். உயிர் எழுத்துடன் மெய்எழுத்துச் சேர்ந்து மிகப் பல இடங்களில் வரும். அவற்றைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள இயலும். எனவே, இப்பாடத்தில் மெய்ம்மயக்கம் பற்றி மட்டுமே தெரிவிக்கப்படுகிறது.

மெய்ம்மயக்கம் இரண்டு வகைப்படும். அவை:

1. வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

2. உடன்நிலை மெய்ம்மயக்கம்

என்பவை ஆகும்.