இலக்கணம்-முதல்தொகுதி

பொது விளக்கம்

தமிழ் மொழியில் 2400ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் இயற்றப்பட்டுள்ளது. இன்று வரை நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள்இயற்றப்பட்டுள்ளன. இந்த இலக்கண நூல்கள் தமிழ் மொழிக்குச் சிறந்த இலக்கணவரையறையைக் கொடுத்துள்ளன.

தமிழ் இலக்கணத்தை ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர். அவை,

  1. எழுத்து இலக்கணம்
  2. சொல் இலக்கணம்
  3. பொருள் இலக்கணம்
  4. யாப்பு இலக்கணம்
  5. அணி இலக்கணம்

என்பவை ஆகும். இந்த ஐவகை இலக்கணம் பற்றிய அறிமுகத்தை இந்தத் தொகுதிவழங்குகிறது.

இந்தத் தொகுதியின் `தமிழ் இலக்கண அறிமுகம்-எழுத்து, சொல்’ என்னும் முதல்பாடம் தமிழ் இலக்கணம் பற்றிய பொது அறிமுகத்தையும் எழுத்து இலக்கணம், சொல்இலக்கணம் பற்றிய அறிமுகத்தை வழங்குகிறது. முதல் எழுத்துகள் பற்றியும் சார்புஎழுத்துகள் பற்றியும் விளக்குவதுடன் திணை, பால், எண், இடம் முதலியவை பற்றியும்இந்தப் பாடம் எடுத்து உரைக்கிறது. மேலும் நால்வகைச் சொல் இலக்கணம் பற்றியஅறிமுகத்தையும் இந்தப் பாடம் வழங்குகிறது.

`தமிழ் இலக்கண அறிமுகம் - பொருள், யாப்பு, அணி’ என்னும் இரண்டாம் பாடம்அகப்பொருள், புறப்பொருள் இலக்கணத்தையும் அசை, சீர், தளை, அடி, தொடை,முதலிய யாப்பு இலக்கணத்தையும் அணி இலக்கணத்தையும் அறிமுகம் செய்கிறது.

`எழுத்து இலக்கணத்தின் அமைப்பு’ என்னும் மூன்றாம் பாடம் தமிழ் எழுத்துகளின்ஒலி, வரி வடிவங்களை அறிமுகம் செய்கிறது. சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், இனஎழுத்துகள், மாத்திரை முதலியவற்றை அறிமுகம் செய்கிறது.

`சார்பு எழுத்துகள்’ என்னும் நான்காம் பாடம் உயிர்மெய் முதலான பத்துவகைச்சார்பு எழுத்துகளையும் விளக்குகிறது.

`மொழி முதல், மொழி இறுதி எழுத்துகள்’ என்னும் ஐந்தாம் பாடம் தமிழ் மொழியில்சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் எவை என்பதையும் சொல்லின் இறுதியில் வரும்எழுத்துகள் எவை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

`மெய்ம் மயக்கம்’ என்னும் ஆறாம் பாடம் மெய்ம் மயக்கம் என்பதைவிளக்குவதுடன் வேற்றுநிலை மெய்ம் மயக்கம், உடன் நிலை மெய்ம் மயக்கம்முதலியவற்றையும் விளக்குகிறது.

முன்