பாடம் - 3

C02123 : மெய்யெழுத்துகளின் பிறப்பு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தமிழில் உள்ள மெய்யெழுத்து ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்துகளைத் தெரிவிக்கிறது.

இந்தப் பாடம் மெய்யெழுத்து ஒலிகளின் பிறப்புப் பற்றி நன்னூல் தெரிவிக்கும் கருத்துகளைக் கூறுகிறது.

சார்பெழுத்துகளின் பிறப்புப் பற்றித் தெரிவிக்கிறது.

மெய்யெழுத்துகளின் பிறப்புப் பற்றி மொழியியலார் தெரிவிக்கும் கருத்துகளைக் கூறுகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மெய்யெழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளை அறியலாம்.

  • மெய்யெழுத்துகளின் பிறப்புப் பற்றி நன்னூல் தெரிவிக்கும் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

  • மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்துத் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இவ்விரு இலக்கண நூல்களும் தெரிவிக்கும் கருத்துகளின் ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்து கொள்ளலாம்.

  • சார்பெழுத்துகளின் பிறப்புக் குறித்து அறியலாம்.

  • மெய்யெழுத்துகளின் பிறப்புப் பற்றி மொழிநூல் தெரிவிக்கும் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு