6.0 பாட முன்னுரை

பதவியல் தொடர்பான முந்தைய பாடத்தில் பகுபதத்தின் இலக்கணத்தை அறிந்து கொண்டோம். அதன் உறுப்புகள் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகிய ஆறு என்பதையும் தெரிந்து கொண்டோம். மேலும் சென்ற பாடத்தில் பகுபதத்தின் பகுதி குறித்து விரிவான பல செய்திகளையும் அறிந்தோம். இந்தப் பாடத்தில் பகுபத உறுப்புகளில் விகுதி, இடைநிலை ஆகிய இரண்டு குறித்தும் விளக்கமாகக் காண்போம்.