4) |
பெயர்ப்பகுபதத்தில் எவையேனும் மூன்றினை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக. |
பெயர்ப்பகுபதம் பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு) தொழில் என ஆறு வகைப்படும். (1) பொருட்பெயர்ப் பகுபதம்: ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பகுபதம் பொருட் பெயர்ப் பகுபதம் எனப்படும். எடுத்துக்காட்டு : பொன்னன் - பொன் + அன். பொன்னை உடையவனைக் குறிக்கும் சொல். (2) இடப்பெயர்ப் பகுபதம்: இடத்தின் அடிப்படையில் அமைவது இடப்பெயர்ப் பகுபதம் ஆகும். எடுத்துக்காட்டு: விண்ணோர் - விண்ணின் இடம் வாழுவோர் என்னும் பொருளில் அமைந்த பகுபதம். (3) சினைப்பெயர்ப்பகுபதம்: உறுப்பின் பெயர் அடிப்படையில் அமையும் பெயர் சினைப்பெயர்ப் பகுபதம் எனப்படும். எடுத்துக்காட்டு: கண்ணன் - கண் + அன். கண் என்னும் உறுப்பின் காரணத்தால் வந்த பெயர். |