பாடம் - 5

C02125 : பகாப்பதமும் பகுபதமும்-பகுதி I

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் பகாப்பதத்தின் வகைகளையும் பகுபதத்தின் வகைகளையும் விளக்குகிறது. பகுபத உறுப்புகளை எடுத்துரைக்கின்றது. பகுபத உறுப்புகளுள் ஒன்றான ‘பகுதி’யின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறுகிறது. பகுதியின் வகைகளையும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • இந்தப் பாடத்தில் பகாப்பதத்தின் வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

  • இந்தப் பாடத்தின்வழி பகுபதத்தின் வகைகளை அறிந்து கொள்ளலாம்.

  • இந்தப் பாடத்தின்வழி பகுபதத்தின் உறுப்புகளான பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவற்றின் இலக்கண வரையறைகளைக் கண்டறியலாம்.

  • ‘பகுதி’ யின் வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

  • பகுதிகள் பிற சொற்களோடு சேரும்போது அடையும் மாற்றங்களை அறியலாம்.

பாட அமைப்பு