|
புணர்ச்சி என்றால் என்ன என்பதை விளக்கிச் சொல்கிறது. புணர்ச்சியில்
வரும் நிலைமொழி, வருமொழி ஆகியவற்றை விளக்குகிறது. தமிழ் இலக்கண
நூலார் புணர்ச்சிக்கு முக்கிய இடம் தந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
நன்னூலார் தரும் புணர்ச்சி விளக்கத்தைக் குறிப்பிடுகிறது. நன்னூலாரின்
புணர்ச்சி விளக்கத்தின் வழி நின்று, புணர்ச்சியை எழுத்துகள்,
பதங்கள், பொருள், எழுத்து மாற்றம் என்னும் நான்குவகை அடிப்படையில்
பாகுபடுத்தி, அவை ஒவ்வொன்றையும் தக்க சான்றுகளுடன் விளக்குகிறது. |