நிலைமொழியின் இறுதியிலும்,
வருமொழியின் முதலிலும் எந்த எந்த எழுத்துகள் வரும் என்பது பற்றிச்
சொல்கிறது. உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும்,
குற்றியலுகரத்தையும் ஈறாகக் கொண்டிருக்கும் நிலைமொழிகள், மெல்லினம்
மற்றும் இடையின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு
புணர்வதற்கு உரிய பொதுவான புணர்ச்சி விதியை விளக்கிச் சொல்கிறது.
உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் இறுதியாகக்
கொண்ட பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களுக்கு முன்னும், வினாப்பெயர்,
விளிப்பெயர்களுக்கு முன்னும், முன்னிலை வினை, ஏவல்வினைகளுக்கு
முன்னும் வல்லின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள்
வந்து புணர்வதற்கு உரிய பொதுவான புணர்ச்சி விதிகளையும் விளக்கிச்
சொல்கிறது. |