|
உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி
என்றால் என்ன என்பது பற்றிச் சொல்கிறது. உயிர்முன் உயிர்
வந்து புணரும் புணர்ச்சி பற்றிச் சொல்கிறது. அப்புணர்ச்சியில்
ய, வ என்னும் மெய்கள் உடம்படுமெய்களாகத் தோன்றுவதை விளக்கிச்
சொல்கிறது. எகர வினா முன்னரும், அ,இ,உ என்னும் மூன்று
சுட்டுகளின் முன்னரும் நாற்கணம் வந்து புணர்வதை விளக்கிச் சொல்கிறது.
நிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியலுகரம் வருமொழி முதலில் உயிரும்
யகரமும் வரும்போது அடையும் மாற்றங்களை விளக்கிச் சொல்கிறது.
எல்லா உயிர் ஈற்றுச்
சொற்களுக்கும் முன்னர் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகுந்துவரும்
என்பதை விளக்கிக் காட்டுகிறது.
|