| மொழிக்கு
இறுதியில் வரும் பன்னிரண்டு உயிர்களில் எ, ஒ, ஔ என்னும் மூன்று
உயிர்கள் நீங்கலான ஏனைய ஒன்பது உயிர் ஈறுகள் பற்றி நன்னூலார்
கூறும் புணர்ச்சி விதிகளை விளக்கிச் சொல்கிறது. நன்னூலார் உயிர்
ஈற்றுப் புணர்ச்சி விதிகளை அகர ஈற்றுச் சிறப்பு விதிகள், ஆகார
ஈற்றுச் சிறப்பு விதிகள் என்றவாறு ஒவ்வோர் உயிர் ஈற்றிற்கும்
தனித்தனியாகவே கூறுகிறார். நன்னூலார் கூறும் நெறிமுறையில் ஒவ்வோர்
உயிர் ஈற்றிற்கான புணர்ச்சி விதிகளை இப்பாடம் தக்க சான்றுகள்
காட்டி விளக்கிச் சொல்கிறது.
|