|
|
நிலைமொழியில்
உள்ள ஆறுவகைக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களோடு, வல்லினத்தை முதலாகக்
கொண்ட வருமொழிகள் அல்வழிப் பொருளிலும், வேற்றுமைப் பொருளிலும்
எவ்வாறு புணரும் என்பதை விளக்கிச் சொல்கிறது. வேற்றுமைப் புணர்ச்சியில்
நெடில் தொடர்க் குற்றியலுகரமும், உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும்
ஒற்று இடையில் மிகுதல், ஒற்று இடையில் மிகாமல் இயல்பாதல் என்ற
இருவகையாக வருவதை விளக்கிச் சொல்கிறது. எந்த எந்தக் குற்றியலுகரங்களின்
முன்வரும் வல்லினம் மிகாது, எந்த எந்தக் குற்றியலுகரங்களின்
முன் வரும் வல்லினம் மிகும் என்பதை வரையறுத்துச் சொல்கிறது.
குற்றியலுகர ஈற்றுத் திசைப் பெயர்களோடு திசைப் பெயர்களும், பிற
பெயர்களும் புணரும் புணர்ச்சியை விளக்கிச் சொல்கிறது. தேங்காய்
என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை எடுத்துச் சொல்கிறது. |