6.1 எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி - பொதுவிதி வருமொழியில் எண்ணல் அளவைப் பெயர் (எண்ணுப்பெயர்) நிறுத்தல் அளவைப் பெயர், முகத்தல் அளவைப் பெயர், நீட்டல் அளவைப் பெயர் ஆகிய பெயர்களும், பிற பெயர்களும் வந்தால், நிலைமொழியில் உள்ள ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களில் சில விகாரங்கள் ஏற்படும். அவை வருமாறு:
சான்று: ஒன்று + ஆடு = ஓராடு (ஒ - ஓ என நீண்டது)
சான்று: மூன்று + தமிழ் = முத்தமிழ் ( மூ - மு எனக் குறுகியது)
சான்று: ஒன்று + ஆடு = ஓராடு (று - கெட்டது)
சான்று: ஏழு + கடல் = ஏழ் கடல் நூற்பா: எண், நிறை, அளவும்,
பிறவும் எய்தின் (அளவு - முகத்தல் அளவை, நீட்டல் அளவை; ஏகும் - கெடும்; ஏற்புழி - ஏற்புடைய இடங்களில்; என்மனார் - என்று சொல்வர்) இந்நூற்பாவில் கூறப்படும் முதல் நீளல், முதல் குறுகல் முதலான விகாரங்களை ஏற்புடைய இடங்களில் ஏற்றவாறு கொள்ள வேண்டும் என்கிறார் நன்னூலார். சான்றாக ஒன்று என்பது வருமொழி முதலில் உயிர் வரும் போது ஓராயிரம் என முதல் குறில் நீள்கிறது; ஆனால் வருமொழி முதலில் மெய்வரும்போது ஒரு கால் என முதல் குறில் விகாரம் எதனையும் கொள்ளாமல் குறிலாகவே உள்ளது. எனவேதான் நன்னூலார் ஏற்புடைய இடங்களில் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். நூற்பாவில் வரும் ‘ஏற்புழி’ என்பதற்குப் பொருளும் விளக்கமும் இதுவேயாகும். |