|
மொழிக்கு இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் எவை என்பதைக்
குறிப்பிடுகிறது. நிலைமொழியின் இறுதியில் நிற்கும் எல்லா மெய்யெழுத்துகள் முன்னரும்
உயிர் வந்து புணர்வது பற்றி நன்னூலார் கூறும் பொதுவிதிகளை விளக்கிச் சொல்கிறது.
நிலைமொழியின் இறுதியில் நிற்கும் ணகர, னகர மெய்கள்,
வருமொழி முதலில் வரும் வல்லின, மெல்லின, இடையின மெய்களோடு அல்வழி, வேற்றுமை என்னும்
இரு பொருளிலும் புணரும்போது அடைகின்ற மாற்றங்கள் பற்றி நன்னூலார் கூறும் சிறப்பு
விதிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்கிறது. |